பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர்களுக்காக இந்தக் கதை!
"எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை
எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –
பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.
பரிகாரம் தொடர்பான குட்டி கதை.
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.
அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது.
ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.
அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.
“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே” என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான்.
அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.
தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.
“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..” என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.
அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்…. “ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?
நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே?
நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்..?”
“ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…” எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்… “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம்வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.
*வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது 👇*
*1) பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை.*
*2) செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை.*
*3) வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை.*
*4) ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.*
*5) மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை.*
*6) உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை.*
*7) அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை.*
*8) எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை.*
*9) நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.*
*10) அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.*
0 Comments
We love comments! We appreciate your queries but to protect
from being spammed, all comments will be moderated
by our human moderators.Let's enjoy a happy and meaningful conversation ahead!