*மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்.*
*குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்.*
*சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று உணர்வீர்கள்.*
*அரசியல்வாதி முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்.*
*ஆயுள் காப்பீட்டு முகவர் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - இறப்பது நல்லது என உணர்வீர்கள்.*
*வணிகர்களுக்கு முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.*
*விஞ்ஞானிகளுக்கு முன்பாக 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள்.*
*நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் - மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள்.*
*ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.*
*ஒரு சிப்பாயின் முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள் - உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.*
*ஆனால், முடியும் போதெல்லாம்* *நல்ல நண்பனின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக உணர்வீர்கள்!*
*சேரும் இடமறிந்து சேர்!!*😊
நல்லதை நினையுங்கள்
நல்லதே நடக்கும் ....
*ஐயப்பன் தத்துவ விளக்கம்*
*இருமூர்த்தி மைந்தன்*
____________________________
நாராயணன் என்னும் சொல்,
(நாரம் - தண்ணீர் : அயனம் - பிறத்தல்)
ஆதலால் *நாராயணன் நீர் அம்சம் என்பது விளங்குகின்றது.*
சிவன் என்னும் சொல், செம்மை என்ற சொல்லிலிருந்து தோன்றியது.
(செம்மை - செந்நிறம்) சிவனை, செஞ்சுடர் மேனியனே என்பதால், *சிவன் நெருப்பு அம்சம் என்பது விளங்குகின்றது.*
*நாராயணனும், சிவனும் (நீரும், நெருப்பும்) ஒன்று படுவதால் ஏற்படும் ஆவியே ஐயப்பன்* (ஐ -ஐயன், தலைவன்.)
இதனை *"நீர் மேல் நெருப்பும், நெருப்பின் மேல் உயிர்ப்பும்"* என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் ராமலிங்க அடிகள் கூறுகிறார்கள்.
வெப்பமும் தட்பமும் மாறுபட்டவை.
வெப்பமான நெருப்பும் தட்பமான நீரும் ஒன்றுபட்டு அதனால் உண்டாகிய
*நீராவியால் அனேக இயந்திரங்கள் இயங்குகின்றன.* இதனினின்றும்
நாம் ஒர்பெரிய ரகசியத்தை அறியலாம்.
*"புனலுருவாய் அனலுருவில் திகழும் ஜோதி" என்று நம்மாழ்வாரும்*
*"நீர் மேல் நெருப்பு" என்று திருவருட்பிரகாச வள்ளலாரும்*
*"நீர் பூத்த நெருப்பு" என்று பெரியோர்களும்* கூறுவதை சிந்திக்க இது நன்கு விளங்கும்.
அதாவது நாம் உண்ட அன்னமானது, பிராண நீராகின்றது. *நீரின்மேல் நெருப்பாக ஜோதியாக விளங்குகிறான் இறைவன்.*
*இறைவன் நம் உள்ளத்தில் நீர்மேல் நெருப்பாக இருந்து அதனினின்றும் ஏற்படும் ஆவியால் நம்மை இயக்குகின்றான்.*
*"உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்" என்று தாயுமானாரும்,*
*"பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே" என்று அப்பர் அடிகளும்* கூறுவதால்
*நம் ஆவியை ஆண்டவனுக்கு அர்ப்பணித்தலே👁️🔥👁️ நெய்வேத்தியமும், பூசனையுமாகும் என்பது விளங்குகின்றது.*
நூல் ஜோதி வழிபாடு
ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர்
ஆத்திசூடி- வேணுசீனிவாசன்
106. வைகறைத் துயிலெழு.
நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும் எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு. பிரம்மனுடைய மனைவி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பது முன்னோர் நம்பிக்கை. ...
அதிகாலை எழும் பறவை இரையோடுதான் திரும்பும்' என்பது வழக்குமொழி. `சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழித்தெழுவதுதான் ஒருவனை ஆரோக்கியமாகவும், திறமையானவனாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் வைத்திருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
ஆனால், இன்றைய தலைமுறையிலோ, பலரும் நடு இரவுக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள்; காலையில் தாமதமாகத்தான் எழுகிறார்கள். இதனால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அவசர அவசரமாகக் கிளம்பவேண்டியிருப்பதால், காலை உணவைத் தவிர்ப்பது தொடங்கி, கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்கு ஆளாவது வரை பல விபரீதங்கள்!
உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.
பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! கோடீஸ்வரர்களை உருவாக்கிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம்
என்பது பலபேர் அறிந்திராத ரகசியம். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும்.
இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். எனவேதான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது!
உடலுக்கும், உள்ளத்துக்கும், ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்! அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். காரியங்கள் சிறப்பாக முடியும். அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.அதிகாலை எழுவதால் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். தியானம் செய்யலாம். இறைவழிபாடு செய்வது நன்மை தரும்.
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள் பீனியல் சுரப்பியை இயங்கச் செய்கிறது. பீனியல் சுரப்பியிலிருந்து மெலட் டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. காலை 6.00 மணிக்கு பிறகு மெலட்டோனின் என்ற திரவம் சுரப்பது நின்று விடுகிறது.
அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில் சுரக்கும் இந்த திரவமே மூளைக்கும் இருதயத்திற்கும், தண்டுவடத்திற்கும், மூளைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும், நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச் செய்கிறது. மெலட்டோனின் ஹார்மோன்தான் 24 மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது.
உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரி செய்ய லட்சுமி கடாக்ஷத்துடன், நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் இந்த பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்!
நமது மனதில் இருக்கும் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம். இன்றைக்கு வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலையில் எழுந்தவர்கள்தான். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்.
விடியற்காலையில் எழுந்து கொள்ள விரும்பினால்
இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்துக் கொள்ளுங்கள். எளிதில் செரிமானம் ஆகக்கூடியவற்றை மட்டுமே உண்ணுங்கள்
தொலைக்காட்சி , மொபைல் பார்ப்பதை இரவு நேரங்களில் தவிருங்கள்.
படுக்கையறையில் வாசனை தரும் ஊதுவத்தியை அல்லது நறுமணம் தரும் வஸ்துக்களை புகைய விடுங்கள்.
சீக்கிரம் தூங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளுங்கள் இப்படிச் செய்தால் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும்.இந்த அறிவுரை உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் சேர்த்துத்தான்.
0 Comments
We love comments! We appreciate your queries but to protect
from being spammed, all comments will be moderated
by our human moderators.Let's enjoy a happy and meaningful conversation ahead!