ஒரு மரத்தடியில்,
ஞானி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார்.
விடியற் காலை நேரத்தில், அங்கு வந்த இளைஞன் ஒருவன்,
அவரது தியானத்தைக் கலைத்தான்.
கண்விழித்த ஞானி,
எதிரே நின்ற இளைஞனை,
அமைதியோடும், ஆச்சர்யத்துடனும் பார்த்தார்.
அந்த இளைஞன், சற்று படபடப்புடன் ஞானியிடம் பேசினான்.
' ஐயா,
இரவு எனது கனவில்
கடவுள் வந்தார்.
அவர் உங்களை குறிப்பிட்டு,
'அந்த ஞானியிடம் அதிக விலை மதிப்புள்ள ஒரு வைரக்கல் உள்ளது. அதை, நீ வாங்கிக்கொள்'
என்று சொன்னார் ' என்றான்.
ஞானி, தன்னிடமிருந்த ஒரு பையை எடுத்தார்.
அதிலிருந்த ஒரு வைரக் கல்லை அந்த இளைஞன் கையில் கொடுத்தார்.
மீண்டும் அமைதியாக தியானத்தில் ஆழ்ந்து விட்டர்.
வைரத்தைப் பெற்றுக் கொண்ட இளைஞன்,
நேராக ஒரு வைர மதிப்பீட்டாளர் வீட்டிற்கு சென்றான்.
அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி
அந்த வைரத்தின் தரம், மதிப்பைப் பற்றிக் கேட்டான்.
வைரத்தை சோதித்துப் பார்த்தவர்,
அந்த இளைஞனிடம் ,
' இது தோஷமில்லாத ராசியான வைரம்.
இது அளவில் சற்று உருவாக ( சற்று பெரியதாக ) இருப்பதால்,
வைர வணிகர்கள், நீ கேட்கும் அளவுக்கு பணம் கொடுப்பார்கள் '
என்று சொல்லி விட்டு, வைரத்தை இளைஞனிடமே கொடுத்து விட்டு,
அவர் வீட்டுக்குள் தூங்கப் போய் விட்டார்.
பிறகு, பெரிய செல்வந்தரான,
ஒரு வைர வணிகரிடம்,
அதைக் காண்பித்தான்.
' இது ராசியான வைரம்.
நீங்கள் விற்பதாக இருந்தால்,
நானே வாங்கிக் கொள்கிறேன்.
நீங்கள் கேட்கும் அளவிற்கு
தங்க கட்டிகளாகவோ, அல்லது ரொக்கமாகவோ
கொடுக்கிறேன் ' என்றார்.
' இதை விற்பதற்கில்லை '
என்று சொல்லிவிட்டு, அவரிடமிருந்து வைரத்தை திரும்ப வாங்கிக் கொண்ட அந்த இளைஞன்,
நேரே மீண்டும் அந்த ஞானியிடமே சென்றான்.
அவர் இன்னும் தியானத்திலேயே இருந்தார்.
இந்த முறை, அவரது தியானத்தை
கலைக்க விரும்பாத இளைஞன், அமைதியாக அவருக்குக் கீழே அமர்ந்து
அவரது தியானம் முடியும் வரைக் காத்திருந்தான்.
தியானம் முடிந்து கண் விழித்த ஞானியிடம்,
அவர் தந்த அந்த வைரத்தை திருப்பிக் கொடுத்தான்.
தன்னை வியப்புடன் பார்த்த ஞானியிடம்,
அந்த இளைஞன், அமைதியாக பேசினான்.
' நீங்கள் தந்த இந்த வைரம்,
மிகவும் விலை மதிப்பு மிக்கது.
இதை,
எந்த வித மறு பேச்சுமில்லாமல்,
நான் கேட்ட உடனே
என்னிடம் தந்து விட்டீர்கள்.
அதற்கு என்ன அர்த்தம் ஐயா ?
இந்த வைரத்தை விட,
விலை மதிப்பு மிகுந்த
வேறு ஏதோ ஒருப் பொருள்
உங்களிடம் உள்ளது என்றுதானே அர்த்தமாகிறது ?
அந்தப் பொருளை எனக்குத் தாருங்கள்.' என்றான் பணிவாக.
ஞானி, அமைதியாக சிரித்தார்.
அந்த இளைஞனை அருகில் அழைத்தார்.
அவனது தலை முடியை அன்பாக தடவிக் கொடுத்தார்.
' அந்த பொருள்தான் தம்பி...
*நீ ...உன்னை அறிதல் '*
தன்னை உணர்ந்த ஞானிகளும், மகான்களும்
அந்த இன்பத்திலேயே
மவுனமாக இருந்து விட்டதால்,
அதன் ஆனந்தம், மதிப்பு
உலக மக்களுக்கு
இன்று வரைப் புரியாமலேயேப்
போய் விட்டது.
அந்த அற்புதம் பற்றி இந்த உலகுக்கு
சொல்வதற்கு யாருமில்லை
ஏதாவது ஒரு குப்பையை,
அது குப்பை என்று அறியாமல், வெளியுலகில் தேடிக் கொண்டுப் போவதிலேயே,
உலக மக்கள் அனைவருக்கும்
வாழ்க்கை முடிந்து விடுகிறது.
மக்கள் மரணம் வரைக்கும்
இந்தப் போராட்டமே தொடர்கிறது.
*தன் மனதையும், உணர்வுகளையும் கையாள தெரிந்து* *கொள்வது,*
ஒரு வித்தை.*
*அது இந்த உலகையே வெல்லும் வித்தை.*
அதை, உனக்கு சொல்லித்
தருகிறேன் வா'
என்று அந்த இளைஞனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் ஞானி.
தனக்குள் இருக்கும்
விலை மதிக்க முடியாத
அம்சத்தை எல்லாம்
அந்த இளைஞனுக்கு
கற்றுக் கொடுத்தார்
0 Comments
We love comments! We appreciate your queries but to protect
from being spammed, all comments will be moderated
by our human moderators.Let's enjoy a happy and meaningful conversation ahead!