Post Counts

header ads

கூட்டுப்பிரார்த்தனை

கூட்டுப்பிரார்த்தனை கடல் அன்னைக்கு

கடல் அன்னைக்கு நன்றி! 

கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திற்கு நன்றி! 

அனைத்து உயிர்களின் நலன் கருதி, மழை அளவாக பொழிந்தமைக்கு நன்றி! 

கார்த்திகையில் கன மழை பெய்து கொண்டிருப்பதற்கு நன்றி! 

அனைத்து நீர் ஆதாரங்களும் நிரம்பி கொண்டிருப்பதற்கு நன்றி! 

அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தரும் பிரபஞ்ச பேராற்றலுக்கு 

மிக்க நன்றி! 

அனைத்து உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் 

இறை ஆற்றலுக்கு நன்றி! 

உயிர்களின்

எதிர்கால நலன் கருதி எட்டுத்திக்கிலும் 

பெய்து கொண்டிருக்கும் கனமழைக்கு 

கோடான கோடி நன்றிகள்! 

எல்லா உயிர்களும் இன்புற்று வழ்க 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


கூட்டு பிரார்த்தனை குழந்தைகள்

குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடி மகிழட்டும்! 

கபடி, கில்லி, கிட்டி, கோலி, குதிரை பந்து, பம்பரம், திருடன் போலீஸ், நீச்சல், வில், கிரிக்கெட், என அவர் அவர் வட்டார விளையாட்டுக்களை குழந்தைகள் ஒற்றுமையாக விளையாடி மகிழட்டும்! 

குழந்தைகள், தட்டாங்கள், தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, நொண்டி, கண்ணாமூச்சி, ஒத்தையா ரெட்டையா, என பல்வேறு விதமான விளையாட்டுக்கள் விளையாடி மனதிற்கும், கண்களுக்கும், உடம்பிற்கும், புத்திக்கும், வேலையும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்! 

நமது பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கி வளரட்டும்! 

பெற்றோர்கள் அனைவரும் தாங்கள் விளையாடி மகிழ்ந்ததை உணர்ந்து தன் குழந்தைகளையும் வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாட விடட்டும்! 

குழந்தைகள் பெரியவர்களை மதித்து நடக்கட்டும்! 

பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின், மெய் ஞானம், கட்டுறிதியான உடல், தெளிவான மனம், வலிமையான ஒற்றுமை, பாசமுள்ள சகோதரத்துவம், கள்ளங்கபடமற்ற அன்பு,... ஆகிய அனைத்தும் கிடைக்கட்டும்! 

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! 

கூட்டு பிரார்த்தனை இயற்கையை காப்போம்

“இயற்கையை காப்போம்”

பாரம்பரிய வீரிய விதைகள் மூலம் விவசாயம் செழிக்கட்டும்! 

பாரம்பரிய வீரிய விதைகளை மட்டுமே விவசாயிகள் பயிரிடட்டும்! 

அரசு பாரம்பரிய வீரிய விதை வங்கிகளை அனைத்து கிராமத்திலும் தொடங்கட்டும்! 

இயற்கை உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தட்டும்! 

நாட்டு மாடுகள், நாட்டு கோழிகள் மட்டுமே நடமாடட்டும்! 

காகித பைகள், துணி பைகள், பாக்கு, மட்டை தட்டு,... என மண்ணில் மக்கும் பொருட்களை மட்டும் மக்கள் பயன்படுத்தட்டும்! 

ஊரெல்லாம் நாட்டு ரக வீரிய மரங்கள், வளரட்டும்! 

மரங்களில் குருவி பறவைகளின் சத்தம், மக்களின் காதுகளில் இனிமையை ஏற்படுத்தட்டும்! 

தட்டான்கள் பெருகட்டும்! 

உலகம் முழுவதும் உள்ள காலி இடங்களில் பனைமரங்களை மக்கள் ஆர்வத்துடன் நடட்டும்!

இவ்வனைத்தும் நடைபெற அழகிய பசுமையான பிரபஞ்சத்திடம் அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்வோம். 

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! 

Post a Comment

0 Comments