*💫🌹#நில அளவை*💫🌹
========================
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்கl முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
*சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :*
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று/ கணக்கிட்டு விடுவார்கள்.
4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்./
*நிலத்தை அளக்கும் அளவு முறைகள்*
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
1. *பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் :*
குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. *பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் :*
சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. *மெட்ரிக் வழக்கு அளவுகள் :*
ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன. .
0 Comments
We love comments! We appreciate your queries but to protect
from being spammed, all comments will be moderated
by our human moderators.Let's enjoy a happy and meaningful conversation ahead!