Internal Body Cleansing |
உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*
_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_
இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.
*வெந்நீர்*
+
*எலுமிச்சை சாறு*
+
*தேன்*
செய்முறை
*********
ஒரு டம்ளர் நீரை குறைந்த தணலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !
ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்து கொள்ளவும் !
3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !
காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !
எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர் ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !
*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*
வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !
*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !
பி . கு :
***
சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !
சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !
மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு!
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!
தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும், மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!
- சித்தர்களின் குரல்
👬உடலின் மொழி👫
1. உடல் - உணவைக் கேட்கும் மொழி - பசி
2. உடல் - தண்ணீரைக் கேட்கும் மொழி - தாகம்
3. உடல் - ஓய்வைக் கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி
4. உடல் - நுரையீரலைத் தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலைத் தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால்தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளுக்கும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
நம் உடலை நேசிப்போம்.....
நன்றி.. Nadarajah Kamalaharan
0 Comments
We love comments! We appreciate your queries but to protect
from being spammed, all comments will be moderated
by our human moderators.Let's enjoy a happy and meaningful conversation ahead!