Post Counts

header ads

துளசி வில்வம் சாப்பிடலம்மா?

துளசி வில்வம் சாப்பிட்டால் ஆண்மை குறைவு வருமா?.

பதில்: துளசி , வில்வம் சாப்பிட்டால் கண்டிப்பாக ஆண்மை குறைவு வரவே வராது. ஆண்மை சக்தி அதிகமாகும்.

துளசி மற்றும் வில்வம் உடலுக்கு மிகமிக நல்லது, ஆரோக்கியம், மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கண்டிப்பாக சாப்பிடலாம் ஆண்மைக்குறைவு வரவே வராது.

பல காலமாக நல்ல விஷயத்தை கெட்ட விஷயம் என்றும் கெட்ட விஷயத்தை நல்ல விஷயம் என்றும் சொல்வதையே பிழைப்பாக சிலபேர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே அவர்கள் பேச்சை கேட்க வேண்டாம்.

வள்ளுவர் கூறியது போல மிகினும் குறையினும் நோய்செய்யும் என்ற தத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு பொருளும் அளவுக்கு அதிகமானால் நல்லதல்ல அதேசமயம் அளவு குறைந்தாலும் நல்லதல்ல.

துளசியும் வில்வமும் உடம்புக்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது ஆண்மைக்குறைவு வராது , ஆனால் உடல் , அதில் உள்ள சத்து பொருளை வெளியேற்றும் வேலையை ஆரம்பித்து விடும் .இது நமக்கு தேவை இல்லாத வேலை.

நாம் என்ன செய்கிறோம் என்றால்,  ஒரு பொருள் நல்லது என்று தெரிந்தால் உடனே தினமும் அதிகமாக சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். இல்லை ஒரு பொருள் கெட்டது என்று தெரிந்தால் உடனே அந்த பொருளை சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறோம்.

அடித்தால் மொட்டை வைத்தால் குடுமி என்று வாழக்கூடாது.

ஒரு பொருளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லதல்ல, அளவுக்கதிகமாக எடுப்பது நல்லதல்ல எனவே அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சாப்பிட்டால் பிபி வரும், இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் , காரம் சாப்பிட்டால் தோல் வியாதி வரும் , புளிப்பு சாப்பிட்டால் மூட்டு வலி வரும் ,கசப்பும் துவர்ப்பும் நமக்கு பிடிக்கும் பிடிப்பதே இல்லை, பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் மனித உணவே இல்லை,எண்ணெய் பலகாரம் தேங்காய் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு வரும்,முட்டைக்கோஸ் சாப்பிட்டால் தைராய்டு வரும், உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு தொல்லை வரும். என்று கலர்கலராக ரில் விடுகிறார்கள். தயவுசெய்து இதை எதையும் நம்ப வேண்டாம்.

அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

இது வில்வதற்கும் துளசிக்கு மட்டுமல்ல அனைத்து பொருளுக்கும் பொருந்தும்.

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் அப்பொழுது உங்களுக்கும் ஆண்மை குறைவுக்கும் ,துளசிக்கும்  ,வில்வத்திற்கும் சம்பந்தமில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிடும்.

Post a Comment

0 Comments