Post Counts

header ads

நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம் என்ன


ஜென் குரு ஒருவர் எப்போதும் அமைதியாகவும், நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருந்தார்.
சீடர்கள் சிலர் அவரைக்கேட்டார்கள், “உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம் என்ன?”
குருநாதர் சிரித்துக்கொண்டே சொன்னார் “பெரிதாக ஒன்றுமில்லை.
மிக எளிமையான விஷயங்கள் தான்”...
1. காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, நறுமணம் உள்ள ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
2. வயிறு முட்ட சாப்பிடாதீர்கள். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கட்டும்.
3. கண்ட நேரத்தில் துாங்க வேண்டாம். தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்.
4. பெரும் கூட்டத்திலும் தனிமையைப் பழகுங்கள். தனிமையில் கூட்டத்துக்கு நடுவே இருக்கிற உணர்வை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
5. நன்றாக, தெளிவாகப்பேசுங்கள். அதன்படி நடந்தும் காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள்.
6. ஒவ்வொரு வாய்ப்பையும், ஒரு முறைக்கு பலமுறை நன்கு சிந்தித்த பிறகே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
7. முடிந்து போன விஷயங்களை எண்ணி வருந்தாதீர்கள்.
8. போர் வீரர்களைப்போல் தைரியம் பழகுங்கள். அதே சமயம்,
சிறு குழந்தைகளைப்போல் வாழ்க்கையை
நேசியுங்கள்.
வாழ்க்கையை நேசிப்போம்.

Post a Comment

0 Comments