Post Counts

header ads

கண்ணாடிப் பயிற்சி

கண்ணாடிப் பயிற்சி

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த
தவமுறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை.

இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்,
பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில்பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.


கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை.

கண்ணாடிப்பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்
அவருக்குகீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,

1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து
தனித்து இயங்கும்தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான
திறவுகோலைப்பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாக
கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது.
கண்ணாடிப் பயிற்சிமுறையை சுருக்கமாக ஞானத்திற்கான
திறவுகோல் என்றுசொல்லலாம்.
சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி
சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது.
இதனை இன்னும்சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
சூக்கும உடல்விழிப்புற்று,
காரண உடல் ஜோதி மயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள்
அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும்திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டுவருகிறது
என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை.
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும்
அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவழிமுறைகள்

1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி
ஒன்றேகால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்.

2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமரவேண்டும்.

3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்.

4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது.
மறைவாக ஒரு துணியால் மூடிமறைத்து வைத்து விட வேண்டும்.

5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல்கட்டு
திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு
கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்

6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரைசெய்யலாம்
அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்

கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்
பலவிதநிலைகளில் செய்யப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments