Post Counts

header ads

ஆண்கள் மற்றும் பெண்கள் எந்த பக்கம் சரிந்து தூங்க வேண்டும் ?

ஆண்கள் எந்தப் பக்கம் சரிந்து தூங்க வேண்டும்? பெண்கள் எந்த பக்கம் சரிந்து தூங்க வேண்டும்.?

பதில் : இடது பக்கம் சரிந்து படுத்தால் , வலது நாசியில் மூச்சு காற்று சென்று வந்தால் ,உடல் உஷ்ணம் அதிகமாகும்.

வலது பக்கம் சரிந்து படுத்தால் , இடது நாசியில் மூச்சு காற்று சென்று வந்தால், உடல் குளிர்ச்சி அடையும்.

இதுதான் நாசி தத்துவம்.

எனவே நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்பது முக்கியமல்ல.

உங்கள் உடலில் சூடு அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது வலது பக்கம் சரிந்து படுத்தால் நிம்மதியாக தூங்கலாம்.

உங்கள் உடலில் உஷ்ணம் குறைவாக இருந்தால் இடது பக்கம் சரிந்து படுத்தால் நிம்மதியாகத் தூங்கலாம்.

உதாரணமாக நீங்கள் இடது பக்கம் அரைமணிநேரம் சரிந்து படுத்தால்,  உடல் உஷ்ணம் அதிகமானல் , உங்களுக்கு தானாகவே வலது பக்கம் திரும்பி படுக்க வேண்டும் என்று தோன்றும்.

எனவே இனிமேல் எந்த பக்கம் சரிந்து படுத்தால் நல்லது கெட்டது என்ற சந்தேகத்தை தூக்கி எறியுங்கள்.

நமது உடலுக்கு எந்தப் பக்கம் சரிந்து படுத்தால் ஆரோக்கியம் கிடைக்குமோ , அது தானாக சரிந்து படுத்துக் கொள்ளும்.  எப்படிப் படுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

முடிந்தவரை குப்புற படுத்து தூங்குவதை நிறுத்துங்கள். குப்புற படுத்து தூங்கும் பொழுது நுரையீரலுக்கு தேவையான காற்று ஓட்டம் இல்லாததால் பல்வேறு உபாதைகள் வருகிறது.

படுக்கும் பொழுது எப்பொழுதுமே மல்லாக்க படுத்து தூங்கவேண்டும்.அதாவது,  முதுகுப்பகுதி கீழாகவும்,  நெஞ்சுப் பகுதி மேலாகவும் படுத்து தூங்கும் பொழுது அளவுக்கதிக காற்று நம் உடலுக்கு கிடைக்கும். மிகவும் நல்லது.

பக்கவாட்டில் சரிந்து படுத்தலாம். நல்லது

நமது உடல் தானாகவே வெப்பநிலைக்கு ஏற்றாற்போல வலது பக்கம் , இடது பக்கம் என  திரும்பி திரும்பி தானாக படுத்துக்கொள்ளும்‌  உடலுக்கு அறிவு இருக்கிறது . அது செய்வது சரி என்று புரிந்து கொண்டு இனிமேல் இந்த கேள்வியை மறந்து விடுங்கள்.

பொதுவா ஆண்கள் இடதுபக்கமாக சரிந்து படுக்கணும்,  பெண்கள் வலது பக்கமாக சரிந்து படுக்க னு சொல்லுவாங்க.

இது தாம்பத்திய தாம்பத்திய நேரத்தில் மட்டும்தான் செல்லுபடியாகும். மத்த நேரத்துல செல்லுபடி ஆகாது.

எனவே இனிமேல் வீடுகளில் கணவனும் மனைவியும் ஒன்றாக சேரும் ( தாம்பத்திய ) நேரத்தில் மட்டும் , ஆண்கள் இடது பக்கமும் பெண்கள் வலது பக்கமும் சரிந்து படுத்துக் கொள்ளுங்கள்.

தாம்பத்தியம் முடிந்த பிறகு , அல்லது தனியாக இருக்கும் பொழுது , நீங்கள் எந்த பக்கத்தில் சரிந்து படுத்தால் உங்களுக்கு நிம்மதியாகவும்,  சந்தோசமாகவும் இருக்கிறதோ அந்தப் பக்கம் சரிந்து படுங்கள்.

நிம்மதியாக வாழுங்கள்

Post a Comment

0 Comments