Post Counts

header ads

simple difference village and town

#‎கிராமமும்_நகரமும்‬.....

வெற்றிலை பாக்கு போட்டால் கிராமத்தான்

பீடா போட்டால் நகரத்தான்

பச்சை குத்தினால் கிராமத்தான்

டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்

மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்

மெஹந்தி என்றால் நகரம்

90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்

2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்

மங்களமான மதுரை மஞ்சப்பை என்றால் கிராமம்

மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்

தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்

மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்

கிழிந்த ஆடை போட்டால் கிராமம்

நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்

உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்

உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்

கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்

இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..

எது நாகரீகம் எது ஆரோக்கியம்.....

Post a Comment

0 Comments