மண் பாண்ட சமையல்

.
சமைக்கும் நேரம் அதிகம் ஆகாதா?
கேஸ் அடுப்பில் சமைக்கலாமா?
அனைத்து உணவுகளையும் மண்பாண்டங்களில் சமைக்க முடியுமா?
இலகுவாக பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியுமா? - இப்படி பல கேள்விகள்....

தாராளமாய் கேஸ் அடுப்பில் சமைத்துக்கொள்ளலாம். அலுமினியம், அல்லது சில்வர் பாத்திரங்களில் சமைப்பதைவிட பத்து நிமிடங்கள் அதிகம் ஆகும் மண்பாண்ட சமையலுக்கு,

ஆனால் 10 நிமிடம் முன்னதாகவே நாம் அடுப்பை அணைத்துவிடலாம். மண்சட்டியில் இருக்கும் சூட்டிலேயே அந்த பத்து நிமிடங்களில் முழுவதும் வெந்துவிடும். கேஸ் செலவு மிச்சம்...!!

கேஸ் அடுப்பில் சமையல் செய்வதால் மண்பாண்டங்கள் கரிபிடித்துக்கொள்ளாது. சுத்தம் செய்வது சுலபம்.

அலுமானிய பாத்திரங்கள் நச்சுத்தன்மை உடையது. அதை சூடுபடுத்தும்போது அதிலுள்ள நச்சுக்கள் உணவில் நிச்சயம் கலந்துவிடும்.

சாதம், குழம்பு, கீரைகள், ரசம், என அனைத்தும் சமைத்துக்கொள்ளலாம்.

தோசை,ஆப்பம், ஆம்லேட் போட கூட தற்போது மண்பாண்டங்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

மண்பாண்ட சமையல் என்பது சுவையை மட்டுமல்ல. அது ஆரோக்கியத்தையும் ஆதாரமாக கொண்டது...!!

பாரம்பர்யத்தை நோக்கி திரும்பினால் மட்டுமே இனி நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்......!!

Comments

Popular

Uyire Oru Varthai Sollada Dhilipvarman Song || Song lyrics || Video Song

இல்லுமினாட்டி