Post Counts

header ads

What is an 8 walk ?

எட்டு நடை ( 8 Walk )என்றால் என்ன? எப்படி செய்வது?  பலன் என்ன?

பதில் : சுமார் 15 அடி நீளம் மற்றும் 10 அடி அகலம் கொண்ட இடத்தில் 8 வடிவத்தில் ஒரு மார்க் செய்துவிட்டு, அல்லது மார்க் இல்லாமல் கால்களை அருகில் வைத்து, எட்டு வடிவத்தில் நடக்கும் பயிற்சிக்கு பெயர் எட்டு  நடைபயிற்சி ( 8 Walk ) ஆகும்.

இந்த எட்டு நடை நடக்கும் பொழுது, படத்தில் காட்டியுள்ளது போல, முதலில் எட்டு என்ற எண்ணின் கீழ் பக்கத்தில் உள்ள இடது பக்க வளைவில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு, மேல் பக்க வலது பக்க வளைவில் நடக்க வேண்டும். பிறகு எட்டு வடிவத்தில் மேற்பகுதியில் இடது பக்கம் வளைவில் நடக்க வேண்டும். கடைசியாகத்தான் 8 என்ற எண்ணின் கீழ் பகுதியில் உள்ள வலது பக்கத்திற்கு வந்து ஒரு சுற்றை முடிக்க வேண்டும். என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி பல சுற்றுக்கள் நடக்கலாம்.

இதை தலைகீழாக செய்யக்கூடாது.

இந்த பயிற்சியை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

சாப்பிட்ட உடனே செய்யக்கூடாது. சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு செய்யலாம்.

வயது வரம்பில்லை அனைவரும் செய்யலாம்.

செய்வதற்கு முன்னால் போதுமான தண்ணீர் குடித்துவிட்டு செய்வது சிறப்பு.

தினமும் சுமார் 15 நிமிடம் நடப்பது நல்லது.

இப்படி நடப்பதால், நமது மூளை மற்றும் உடலின் ஒவ்வொரு அணுவும் பூமியின் ஈர்ப்பு சக்தியை நான்கு கோணங்களிலும் மாறி செயல்படுத்துகிறது. இதனால் நமது உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிறது.

நாசியின் இரு துவாரங்களிலும் முழு சுவாசம் நடைபெறுவதால் நாளொன்றுக்கு சுமார் ஐந்து கிலோ காற்று உடம்புக்குள் கூடுதலாக சென்று உடம்பினுள் கூடுதல் சக்தியை கொடுத்து அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகிறது.

எட்டு நடை பயிற்சியின் பலன்கள் :

1. நெஞ்சு சளி, நாசி அடைப்பு, நாசி தடுமன் நீங்குகிறது.
2. தலைவலி தலை, கிறுகிறுப்பு நீங்குகிறது.
3. மார்பு வலி குறைகிறது.
4. கண் பார்வையும், கேட்கும் சக்தியும் கூடுகிறது.
5. முதுகு தண்டுவட வலி நீங்குகிறது.
6. குதிகால், மூட்டு வலி நீங்குகிறது.
7. ஜீரணம் நன்றாக நடப்பதால் சர்க்கரை வியாதி குணமாகிறது.
8. உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் இயங்குகிறது.
9. ஆயுள்காலம் கூடுகிறது.
10. ஆரோக்கியம் கூடுகிறது.
11. மன அமைதி கூடுகிறது.

எனவே இந்தப் பயிற்சி எளிமையானது, செலவில்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது, எந்த ஒரு உபகரணமும் தேவை இல்லை.பாதுகாப்பானது. எனவே எல்லோரும் செய்யலாம்.

எட்டு நடை பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமாக, நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

நன்றி

Post a Comment

0 Comments